கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை


கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 14 May 2020 3:30 AM IST (Updated: 14 May 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2 முறை நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டித்தும், கட்டுப்பாடுகளை அறிவித்தும் அரசு உத்தரவுகளை பிறப்பித்தது.

தற்போது 17-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்குப்பிறகு, அரசுக்கு அளித்த பரிந்துரைகள் பற்றி மருத்துவ நிபுணர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story