சென்னையில், 150 பேருக்கு தொற்று உறுதி: தமிழக போலீஸ், தீயணைப்பு துறையில் கொரோனாவால் 225 பேர் பாதிப்பு


சென்னையில், 150 பேருக்கு தொற்று உறுதி: தமிழக போலீஸ், தீயணைப்பு துறையில் கொரோனாவால் 225 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 May 2020 4:15 AM IST (Updated: 14 May 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையில் கொரோனாவால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 150 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

அர்ப்பணிப்போடு பணியாற்றும் தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீது கொரோனா மிகவும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை கொரோனாவின் தாக்குதலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரின் குடும்பத்தினரும் தாக்குதலில் மாட்டி இருக்கிறார்கள். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் இதுவரை 225 பேர் மீது கொரோனா தாக்குதல் தொடுத்துள்ளது. இவர்களில் தீயணைப்பு துறையினர் மட்டும் 27 பேர் ஆவார்கள். சென்னையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் தீயணைப்பு துறையினர். டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இதில் அடக்கம்.

சென்னையில்தான் 3 உயர் போலீஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளனர். மாவட்ட அளவில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவில் மாட்டி இருக்கிறார்கள். காவலர்கள்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னை போலீசில் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசை சேர்ந்தவர்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 2 போலீசாரும், தேனாம்பேட்டை போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஒருவரும் நேற்றைய பாதிப்பில் உள்ளனர்.

Next Story