ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள்


ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள்
x
தினத்தந்தி 14 May 2020 12:11 PM IST (Updated: 14 May 2020 12:11 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் கோயம்பேடு பரவலால் சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் என மேற்கு மண்டலத்தில் 4 மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதைதவிர்த்து, நீலகிரி - 3, தர்மபுரி - 4 பேர், புதுக்கோட்டை- 4 பேர், திருவாரூர் - 4 பேர், சேலம் - 5 பேர்,, கன்னியாகுமரி- 9, தூத்துக்குடி -9 பேர், திருப்பத்தூர் 10 பேர் என இந்த 8 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.

Next Story