வரி செலுத்துபவர்களின் வசதிக்காக ‘வாட்ஸ்-அப்’ வசதி - ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் தகவல்
வரி செலுத்துபவர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப் வசதி செய்யப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாக வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
இதனை தணிக்கும் வகையில் வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, அவர்கள் தகவல் தொடர்புகொள்ளும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. தலைமை கமிஷனர் பிரத்யேக ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதற்கு பதிலாக, 9444402480 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண் மூலமாக தங்கள் குறைகள், கேள்விகளை அனுப்பி விரைவாக தீர்வு காணலாம்.
மேற்கண்ட எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலமாக மட்டுமே தகவல் அனுப்பவேண்டும். அழைப்பு விடுக்கும் வசதி முடக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் வரி செலுத்துவோர் விரைவாக தீர்வு காணலாம்.
மேற்கண்ட தகவலை சென்னை ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் அலுவலக கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story