சென்னையில் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலம் முதல் இடம்


சென்னையில் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலம் முதல் இடம்
x
தினத்தந்தி 15 May 2020 12:01 PM IST (Updated: 15 May 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ராயபுரம் மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 66 பேர் பலியாகி உள்ளனர்.  9,674 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 2,240 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.  தமிழகத்தில் சென்னை அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால்  ராயபுரம் மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.  இதனை அடுத்து, கோடம்பாக்கம் (895) 2வது இடத்திலும், திரு.வி.க.நகர் (699) 3வது இடத்திலும் உள்ளன.

இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை (608), அண்ணா நகர் (468), வளசரவாக்கம் (461), தண்டையார்பேட்டை (437), அடையாறு (276), திருவொற்றியூர் (127), மாதவரம் (85), மணலி (75), பெருங்குடி (72), ஆலந்தூர் (67) மற்றும் சோழிங்கநல்லூர் (64) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Next Story