கொரோனா தொற்று பாதித்த மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா தொற்று பாதித்த சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகை வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரை பாதித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது மாநகராட்சி பணியாளர்கள் இடையேயும் பரவி வருகிறது. இந்தநிலையில்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளாகும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், தொற்று பாதித்த 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையாக வழங்கப்படும் என் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் டுவிட்டரில் பதிவில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 82 வயதாகும் சமூக ஆர்வலர் திரு. வி.சந்தானம் அவர்கள் தனது வீட்டிலேயே 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கை கழுவும் திரவம் ஆலையை நிறுவி அதனை அவர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
#COVID19 நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 @chennaicorp பணியாளர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.#TNCoronaWarriors#UllaatchiWarriors#TN_Together_AgainstCorona
— SP Velumani (@SPVelumanicbe) May 15, 2020
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 82 வயதாகும் சமூக ஆர்வலர் திரு. வி.சந்தானம் அவர்கள் தனது வீட்டிலேயே 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட #HandSanitizer ஆலையை நிறுவி அதனை அவர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள்.#COVID19#WashYourHands
— SP Velumani (@SPVelumanicbe) May 15, 2020
Related Tags :
Next Story