சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 15 May 2020 12:25 PM IST (Updated: 15 May 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் பணிகளில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  இதுவரை கொரோனா தொற்றுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர்.  9,674 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 2,240 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.  தமிழகத்தில் சென்னை அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story