மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது- கமல்ஹாசன் டுவிட்


மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது- கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 15 May 2020 3:08 PM IST (Updated: 15 May 2020 3:08 PM IST)
t-max-icont-min-icon

மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டி நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது”என்றார்.


Next Story