மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு
மது வாங்க கிழமை வாரியாக வண்ண டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மது வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை டோக்கன் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது.
சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்பட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கவும், குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Related Tags :
Next Story