இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 20 லட்சத்தை தாண்டியது; தமிழகம் 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 20 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகம் 3 லட்சத்தை நெருங்கி உள்ளது
சென்னை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்படி, மே 15 ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 20,39,952 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் சுமார் 92,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.
ஆந்திராவில் 2,01,196 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா 2,205 பாதிப்புகள் உள்ளன, இதில் 1,192 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 48 இறப்புகள் பதிவாகி உள்ளன.
மராட்டியத்தில் 2,40,145 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா 27,524 பாதிப்புகள் உள்ளன, இதில் 6,059 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 1,019 இறப்புகள் பதிவாகி உள்ளன.
கேரளாவில் 40,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா 561 பாதிப்புகள் உள்ளன, இதில் 493 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 4 இறப்புகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் 2,91,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா 9,227 பாதிப்புகள் உள்ளன, இதில் 2240 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 66 இறப்புகள் பதிவாகி உள்ளன.
கர்நாடகாவில் 2,91,4321,28,373 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா 9877 பாதிப்புகள் உள்ளன, இதில் 460 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் மற்றும் 35 இறப்புகள் பதிவாகி உள்ளன.
தெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை மொத்தம் 1,414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 952 பேர் குணமாகி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 34 இறப்புகள் பதிவாகியுள்ளன.
Related Tags :
Next Story