தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறப்பு- டாஸ்மாக் நிர்வாகம்

தமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இருந்த சட்ட தடைகள் விலகின.
இந்த நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டல பகுதிகளை தவிர பிற இடங்களில் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Related Tags :
Next Story