இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் - பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் - பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 16 May 2020 4:00 AM IST (Updated: 16 May 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் மற்றும் அடுத்து அறிவிக்கப்படும் திட்டங்களால் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் என்று நம்புவதாக பிரதமருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு பொருளாதாரம் மற்றும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒருங்கிணைந்த தொகுப்புடன், இந்தியாவின் தற்சார்பு இயக்கம் தொடர்பாக பிரதமர் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர தொழில்களில் பணியாற்றுவோர், வங்கியற்ற நிதி நிறுவனங்கள், மின்சார பகிர்மான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில், ஒப்பந்ததாரர்களின் நலனுக்காக 15 முக்கிய அம்சங்களை மத்திய நிதித்துறை மந்திரியும் அறிவித்தார்.

இது மிகச் சரியான நேரத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு நிதி ரீதியாக ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்குவதோடு, அந்தப் பிரிவுகளில் பொருளாதாரம் மீண்டும் தழைக்க தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது.

மற்ற அறிவிப்புகள்

மற்ற பல பிரிவுகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான அடுத்த அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதோடு, நிதிக்கான அவசர தேவைகளில் உள்ள மாநிலங்களைப் பற்றிய அறிவிப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

நிலையான நிதி ஆதாரத்துக்கு வழிவகுக்கும் திட்டங்களை அறிவித்த பிரதமருக்கு பாராட்டுகள். இந்த அறிவிப்புகளும், உங்கள் தலைமையிலான மத்திய அரசின் மற்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story