எதிர்க்கட்சி தலைவரை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை - டி.ஆர்.பாலு புகாருக்கு, தலைமை செயலாளர் விளக்கம்


எதிர்க்கட்சி தலைவரை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை - டி.ஆர்.பாலு புகாருக்கு, தலைமை செயலாளர் விளக்கம்
x
தினத்தந்தி 16 May 2020 3:45 AM IST (Updated: 16 May 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி தலைவரை அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை என்று டி.ஆர்.பாலு புகாருக்கு, தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சித்தலைவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை என்பதால் தான் கடுமையான கொரோனா தடுப்பு பணிக்கு இடையிலும், டி.ஆர்.பாலு எம்.பி., தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

மாலை மத்திய நிதி மந்திரியின் கொரோனா பாதிப்புக்கான நிவாரண திட்ட அறிவிப்புகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதை நானும் நிதித்துறை செயலாளரும் பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, டி.ஆர். பாலு எம்.பி.யும் மற்றவர்களும் வந்தனர். அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். அதே சமயம் சுமார் 15, 20 நபர் கள் பெரிய பெரிய மனுக்கள் அடங்கிய கட்டுகளை எனது அறைக்குள் கொண்டு வந்தனர். பலர் போட்டோவும் வீடியோவும் எடுத்தனர்.

கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், இத்தனை நபர்கள் திடீரென என் அறைக்கு உள்ளே வந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

எதிர்க்கட்சித்தலைவரின், ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெற்ற மனுக்களில் அவர் கள் நடவடிக்கை எடுத்தது போக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாக டி.ஆர்.பாலு எம்.பி., தெரிவித்து, உங்களின் பதிலை சொல்லுங்கள், எதிர்கட்சித் தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார்.

நான் இவற்றின் மீது முறையான நடவடிக்கையை விரைவாக எடுப்பதாக கூறினேன் என்று தெரிவியுங்கள் என்றேன். அதற்கு எத்தனை நாட்களுக் குள் மனுக்களை அலுவலர்களுக்கு அனுப்புவீர்கள் என கேட் டார். நான் அதற்கு, ஒரு லட்சம் மனுக்கள் உள்ளன, அவற்றை அலுவலர் வாரியாக பிரிக்க வேண்டும், தற்போது கொரோனா பாதிப்பால் குறைந்தபட்ச அலுவலர்கள் தான் பணி செய்கின்ற னர். அதனால் உறுதியாக தேதியை கூற இயலாது என தெரி வித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தேதியை குறிப்பிடுங்கள் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் டி.ஆர்.பாலு எம்.பி. அப்போது பணியாளர் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாக கூறமுடியாது என சொல்லவா என்றார். அப்படி கூற வேண்டாம், மனுக்களை கொடுத்தோம், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என கூறுங்கள் என நான் தெரிவித்தேன். உடனே, அவர் அலுவலர் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கிறோம் என்றார்.

நான் இதுதான் உங்களிடம் உள்ள பிரச்சினை. எங்களின் சங்கடங்களை புரிந்துகொள்வதில்லை என கூறி நீங்கள் எதை வேண்டுமானாலும் பத்திரிக்கையிடம் கூறிக்கொள்ளுங்கள், எனக்கு ஆட்சேபணை இல்லை என தெரிவித்தேன். மற்றபடி அவர்களை அவமதிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை.

அவர்கள் கூறுவது போல் என் அறையில் நான் அமரும் சோபாவிலிருந்து தொலைக் காட்சியைப் பார்க்க முடியாது. எனவே நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தொலைக்காட்சியை பார்த்தேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. எதிர்க்கட்சித்தலைவரையோ, என்னை சந்திக்க வந்த தலைவர்களையோ, தி.மு.க.வையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை.

இந்த மனுக்களை முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, மனுக்களை அலுவலர் வாரியாகவும், துறை வாரியாகவும் பிரித்து ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன்.

அரசியல் வாதியல்ல. மக்களுக்காக பணியாற்றுவதுதான் என் வேலை. எனவே எனக்கு யாரையும் உதாசீனப்படுத்த வேண்டும் என்றோ, அவமதிக்க வேண்டும் என்றோ எந்த காலத்திலும் நினைத்தது இல்லை. என்பணியை அர்ப்பணிப்போடு செய்கிறேன்.

யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் திரித்து பேசுகிறார்கள்? என்பதை எதிர்க் கட்சித்தலை வரும், மக்களுமே புரிந்து கொள் வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story