தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 16 May 2020 6:59 AM IST (Updated: 16 May 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது.

சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவியை வழங்கி வருகின்றன. அந்தவகையில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறது. அவ்வப்போது நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாடி வருகிறார்.

இந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வழியாக கலந்துரையாட உள்ளார்.  இதுகுறித்த அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

Next Story