தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-
சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ. தொலைவில் 'ஆம்பன்' புயல் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 20-ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story