சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் - மத்திய மந்திரி தகவல்


சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 17 May 2020 2:30 AM IST (Updated: 17 May 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சில தேர்வுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும் என்று கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பாடப்பிரிவுக்கு தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்தது.

அதுதொடர்பான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மாணவர்களும், பெற்றோரும் அட்டவணையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் 5 மணிக்கு அட்டவணை வெளியாகவில்லை. இதனால் மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய டுவிட்டரில், ‘சி.பி.எஸ்.இ. சில தொழில்நுட்ப அம்சங்களை கவனத்தில் எடுத்து கொண்டு இருப்பதால், தேர்வு அட்டவணை வருகிற நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும். இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என்று பதிவிட்டு இருந்தார்.


Next Story