+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு


+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு
x
தினத்தந்தி 17 May 2020 4:05 PM IST (Updated: 17 May 2020 4:05 PM IST)
t-max-icont-min-icon

+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மீதியுள்ள 25 மாவட்டங்களில் சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், +2 விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்

* வேன்களில் 7 நபர்கள், பெரிய கார்களில் 3 நபர்கள், சிறிய கார்களில் 2 பேர் ஓட்டுநர் தவிர பயணிக்கலாம்.

*தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக  குறைந்த பணியாளர்களுடன் இயங்கலாம்.

*அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பழைய இ-பாஸ் நடைமுறை தொடரும்.

Next Story