மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை


மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி  நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 17 May 2020 7:20 PM IST (Updated: 17 May 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்தது.

பின்னர், தென்மேற்கு பருவ மழை துவங்கி அணை நிரம்பிய பிறகே, மேட்டூரில் நீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Next Story