வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 6 ரெயில் நிலையங்களில் சூரிய மின்தகடு அமைக்கும் பணி தீவிரம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு


வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 6 ரெயில் நிலையங்களில் சூரிய மின்தகடு அமைக்கும் பணி தீவிரம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு
x
தினத்தந்தி 18 May 2020 1:42 AM IST (Updated: 18 May 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 6 ரெயில் நிலையங்களில் சூரிய மின்தகடு அமைக்கும் பணியை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான 9.051 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. 

இந்த வழித்தடத்தில் உள்ள உயர்மட்டப்பாதையில் தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த 6 ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தி மின்தகடுகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நடப்பு ஆண்டு சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு 8 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுதோறும் ஒரு கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம், ஆண்டிற்கு ரூ.2.54 கோடி சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story