தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல்


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 10:49 AM IST (Updated: 18 May 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தரப்பில்   உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததோடு,மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது.  இதையடுத்து, கடந்த சனிக்கிழமை முதல் சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மாநிலம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

காலை 10 மணி முதல் 5 மணி வரை மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என்று டாஸ்மாக் அறிவித்து இருந்தது.  இந்த நிலையில், மதுபானக்கடைகளின் விற்பனை நேரம் மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது,  இரவு 7 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட இருப்பதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story