விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு


விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2020 12:00 PM IST (Updated: 18 May 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, இது தொடர்பாக  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், “ விவசாயிகளுக்கு மானியம் தரும்  முடிவை தமிழக அரசிடமே விட்டு விட வேண்டும்.  மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story