செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 May 2020 12:15 PM IST (Updated: 18 May 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்தநிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 538 ஆக அதிகரித்து உள்ளது. 

Next Story