தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 18 May 2020 7:11 PM IST (Updated: 18 May 2020 7:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது.  சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலே அவர்களுக்கு பரிசோதனைகளை செய்து வருகிறோம்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அரசு குறைக்கவில்லை.  இதுவரை 3,22,508 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.  மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில், எண்ணிக்கைகளை குறைக்காமல் பரிசோதனைகளை செய்து வருகிறோம்.  அதனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் குறைவு.  அதனால், பொதுமக்கள் பதற்றமோ, பீதி அடையவோ வேண்டாம்.  உயிரிழப்பு விகிதம் 0.68 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 37.46 சதவீதம் ஆகவும், பாதிப்பு விகிதம் 60.49 சதவீதம் ஆகவும் உள்ளது என அவர் கூறினார்.

Next Story