ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு அறிவுரை


ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 19 May 2020 7:17 PM IST (Updated: 19 May 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, வருகிற 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஊரடங்கில் வெளியே வருபவர்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்களில் பலர் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர்.  இதேபோன்று வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.  தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.  ஊரடங்கில் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.  ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவும் பிறப்பித்து உள்ளது.

Next Story