ஊரடங்கில் புழக்கத்தில் விட முயற்சி:கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் 6 பேர் கைது


ஊரடங்கில் புழக்கத்தில் விட முயற்சி:கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2020 1:13 AM IST (Updated: 20 May 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழ துருவாசகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார். அவருடைய கூட்டாளிகள் திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டை கொடுத்ததாக சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கன்னியாகுமரி மாவட்டம் புத்தனேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.

இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து சென்று மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story