அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நீக்கம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
4 மண்டலங்களாக பிரிப்பு
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் பின்வரும் மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும்.
சென்னை மண்டலத்தில், வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தி, காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.
வேலூர், மதுரை மண்டலங்கள்
வேலூர் மண்டலத்தில், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.
கோவை மண்டலத்தில், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும். மதுரை மண்டலத்தில், சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.
மண்டல செயலாளர்கள் நியமனம்
இவைகளின் அடிப்படையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் மண்டலங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை மண்டலத்திற்கு அஸ்பயர் கே.சுவாமிநாதன், வேலூர் மண்டலத்திற்கு எம்.கோவை சத்யன், கோவை மண்டலத்திற்கு சிங்கை ஜி.ராமச்சந்திரன், மதுரை மண்டலத்திற்கு வி.வி.ஆர்.ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
மண்டலங்களுக்கு உள்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story