முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் என பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.
ஆகவே டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முக கவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
இந்நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளதா என்றும் இதற்கு விரிவான பதில் மனுவை 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story