செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 560 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story