தமிழ்நாடு : ஊருக்கு செல்லவேண்டும் என கூறிய வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்


தமிழ்நாடு : ஊருக்கு செல்லவேண்டும் என கூறிய வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 20 May 2020 5:54 PM IST (Updated: 20 May 2020 5:54 PM IST)
t-max-icont-min-icon

ஊருக்கு செல்லவேண்டும் என கூறிய வெளிமாநில தொழிலாளர்கள் மீது செங்கல் சூளை முதலாளி தாக்குதல் நடத்தி உள்ளார்.


சென்னை

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புதுக்குப்பம். இங்கு செங்கல் சூளை ஒன்றில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி செங்கல் சூளை முதலாளியிடம் கூறி உள்ளனர். அவர்களை முதலாளியும் பலரும் தாக்கி உள்ளனர். இதில் பலர் காயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை நடந்து உள்ளது. ஆனால்நேற்றுதான இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

காயம்பட்டவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒடிசாவில் உள்ள தங்கள் உறவினருக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அவர்கள் ஒடிசா அரசை நாடி உள்ளனர். ஒடிசா அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு செங்கல்
சூளை முதலாளி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்குகாலத்தில் வாரம் ரூ 200 கூலிக்கு தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டு உள்ளனர் என விசாரணையில் தெரியவந்து உள்லது

இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ கூறி உள்ளார். அதிகாரிகள் அவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என கூறி உள்ளனர்.

Next Story