சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்வு


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 May 2020 7:45 PM IST (Updated: 20 May 2020 7:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றில் சென்னையில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,672ல் இருந்து 8,228 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் 59 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னை தவிர்த்து செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உள்ளது.  தொடர்ந்து திருவள்ளூரில் 594 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  விமான நிலையம் வழியே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்களில் 54 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Next Story