கொரோனா பாதிப்பில் இருந்து காத்திட மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மத்திய அமைப்பு கோரிக்கை


கொரோனா பாதிப்பில் இருந்து காத்திட மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மத்திய அமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 3:45 AM IST (Updated: 21 May 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஊழியர்களை காத்திட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மின்ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் எஸ்.கண்ணன், சென்னை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய சென்னை மின் திட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள், 13-க்கும் மேற்பட்ட மின்தடை நீக்கப்பிரிவுகள், மின்கட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மின்சார துறை அமைச்சர், வாரிய உயர் அதிகாரிகளுடன் கடந்த 5-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்திய போது, நூறு சதவீதமான பணியாளர்கள் பணி செய்ய உத்தரவாதப்படுத்துவது, அனைத்து பகுதிகளிலும் கணக்கீடு செய்வது, சோப்பு, கிருமி நாசினி அனைவரும் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய உத்தரவிட்டு இருந்தார். அத்துடன் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் போது பாதுகாப்பு உபகரணங்களோடு செல்லவும் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி முக கவசம், கையுறைகள், கிருமிநாசினிகள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கணக்கீட்டாளர்களுக்கு மட்டும் ஒரு முககவசம், கையுறை ஒரு செட் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இவை வழங்க தேவையான தொகைகளை பெற்று கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story