மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரை பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் ஆதிமூலம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது குறித்தும், மத்திய அரசு, பத்திரிகை அச்சு காகிதம் மீதான வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு அளித்திருப்பதையும் தெரிவித்தனர்.
இந்த கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மூலமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாகவும் மாநிலத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசையும் அவர்கள் சந்தித்து பேசினர். பின்னர் அங்கிருந்தபடியே தொலைபேசி வாயிலாக அவர்கள் டாக்டர் ராமதாசிடம் பேசினர். அப்போது அவர், ஊடகங்களுக்கு எப்போதும் பா.ம.க. ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story