ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றம்: தமிழகம் முழுவதும் கைது எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் வாகனங்களில் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கைதானவர்களின் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று பகல் நிலவரப்படி கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்தது. 4 லட்சத்து 8 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகன ஓட்டுனர்களிடம் இருந்து, ரூ.6.55 கோடி அபராத தொகை விதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story