சென்னையில் ஊரடங்கை பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்டால் கடும் நடவடிக்கை - மாஞ்சா நூல் விற்க போலீஸ் தடை நீட்டிப்பு
சென்னையில் ஊரடங்கை பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாஞ்சா நூல் விற்க போலீஸ் தடை நீட்டிப்பு செய்துள்ளது.
சென்னை,
சென்னையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த மே மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் இளைஞர்கள் தங்களது வீட்டு மொட்டை மாடிகளில் நின்று மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விட்டு பொழுதை போக்குகிறார்கள்.
காற்றாடி நூலால் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கழுத்து அறுபட்டு பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சென்னையில் இதுபோல் கழுத்து அறுபட்டு 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
எனவே காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 60 நாட்களுக்கு சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, தயாரிப்பு, பதுக்கல் மற்றும் இறக்குமதி செய்ய தடை விதித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story