இனி வரும் காலங்களில் இணையதளம் மூலம் கற்பிப்பதே அதிகமாக இருக்கும் ஆகாஷ் கல்வியியல் சேவை நிறுவன தலைமை அதிகாரி பேட்டி


இனி வரும் காலங்களில் இணையதளம் மூலம் கற்பிப்பதே அதிகமாக இருக்கும் ஆகாஷ் கல்வியியல் சேவை நிறுவன தலைமை அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 22 May 2020 3:15 AM IST (Updated: 22 May 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

இனி வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் கற்பிப்பதே அதிகமாக இருக்கும் என்று தனியார் கல்வியியல் சேவை நிறுவன தலைமை அதிகாரி ஆகாஷ் சவுத்ரி கூறினார்.

சென்னை,

கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது இயல்பு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் வந்துள்ளன. இதுகுறித்து ‘டி.டி நெக்ஸ்ட்’ பத்திரிகைக்கு ஆகாஷ் கல்வியியல் சேவை நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகாஷ் சவுத்ரி அளித்த பேட்டி வருமாறு:-

மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு நீட் மற்றும் ஐ.ஐ.டி.யில் படிப்பதற்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகளை இந்திய அளவில் நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சிறப்பான பாதையை ஆகாஷ் கல்வி நிறுவனம் காட்டி வருகிறது.

கொரோனா ஊரடங்கினால் எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, கல்வித்துறையில் இணையதள வழியில் கற்கும் ஆன்லைன் கல்வி வெகுவாக பரவ உள்ளது.

பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ள நகரங்களிலிருந்து தூரத்தில் அமைந்துள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்காத மாணவர்கள் ஆகியோர் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, படித்து விரும்பிய லட்சியத்தை அடையலாம். அதற்கேற்ப ஆகாஷ் பயிற்சி மையம் ஆன்லைன் மூலமாகவும் பயிற்சிகளை அளிக்கிறது.

ஒரு லட்சம் மாணவர்

ஆகாஷ் கல்வி மையம் இந்திய அளவில் 200 இடங்களில் பயிற்சியை அளித்து வருகிறது. ஊரடங்கினால் தடை வராதபடி, பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

பாடங்கள் நேரடியாக டெல்லி மையத்திலிருந்து அனைத்து மையங்களுக்கும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. ஐடியூட்டர் மூலம் இ-புத்தகங்கள் அளிக்கப்பட்டன.

அவை பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள், நேரலை பயிற்சிகள் அடங்கிய தொகுப்பு ஆகும். அதன் மூலம் மாணவர்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால பாடத்திட்டங்களை கற்கும் வகையில் முழுமையான பயிற்சி கிடைக்கும்.

கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே இணையதள கல்வி வசதியை அளித்திருந்தாலும், கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமே பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஆகாஷ் பிரைம் கிளாஸ் என்ற புதுமையான பயிற்சி திட்டத்தின் மூலம் இண்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யூ-டியூப் மூலம் பாடங்களை மாணவர்கள் பெற வசதி செய்யப்படுவதால் அலைவரிசை சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

மாணவர்களின் நலனுக்காக 90 சதவீத கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடினமான நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் வகையில் மாணவர்களுக்கான லைவ் ஆன்லைன் கிராஷ் கோர்ஸ் வகுப்பை ஆகாஷ் கல்வி மையம் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story