உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி? முட்டைகளில் ‘கொரோனா’ விழிப்புணர்வு ஓவியங்கள்


உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி? முட்டைகளில் ‘கொரோனா’ விழிப்புணர்வு ஓவியங்கள்
x
தினத்தந்தி 22 May 2020 3:30 AM IST (Updated: 22 May 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து ஒரு விழிப்புணர்வு ஓவியம் அமைக்கப்பட்டிருந்தது.

சென்னை,

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருப்பது எப்படி? என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுவது? உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஜோயல் பெர்ட்டிசியன் என்பவர் முட்டைகளில் ஓவியம் வரைந்து நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது கொரோனா பரவலை தடுக்க அடிக்கடி கை கழுவவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள், கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் சேவைகள் என 100 ஓவியங்களை தனித்தனியாக 100 முட்டைகளில் தீட்டியிருக்கிறார்.

இதில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து ஒரு விழிப்புணர்வு ஓவியம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஜல்லிக்கட்டு மாடு தனது கொம்பால் கொரோனாவை குத்தி தூக்கி வீசுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜோயல் பெர்ட்டிசியன் கூறுகையில், “கொரோனா பரவலை தடுக்க ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இது எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Next Story