சொந்த ஊருக்கு அனுப்பி வைக்ககோரி வடமாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்


சொந்த ஊருக்கு அனுப்பி வைக்ககோரி வடமாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 1:41 AM IST (Updated: 22 May 2020 1:41 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்கள், வேலை இழந்து உணவு, தங்க இடவசதி இல்லாமல் வீதிவீதியாக சுற்றி வந்தனர்.

திருவொற்றியூர்,

ஊரடங்கு காரணமாக திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வேலை பார்த்து வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள், வேலை இழந்து உணவு, தங்க இடவசதி இல்லாமல் வீதிவீதியாக சுற்றி வந்தனர். அவர்கள் நடந்தே சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று சென்றபோது அவர்களை போலீசார் அடித்து துரத்தி விட்டனர். பலமுறை ரெயில் டிக்கெட் எடுக்க முயன்றபோதும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதனால் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளிட்ட தெருவில் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உண்ண உணவின்றி நடைபாதையில் படுத்து தூங்கினர். சமூக ஆர்வலர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி என்பவர், வடமாநில தொழிலாளர்களை தனது இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை குளிக்க வைத்து, உணவு கொடுத்து தங்க வைத்துள்ளார்.

இந்தநிலையில் அவர்கள் அனைவரும் நேற்று தங்களை சொந்த மாநிலமான பீகார் மாநிலம் பாட்னாவுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்ககோரி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story