குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்


குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 22 May 2020 3:55 PM IST (Updated: 22 May 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடும் பொருட்டு விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளை குடிமராமத்து செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அதிகமான நீரை ஏரிகளில் சேமித்து வைக்க முடியும் என்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். எனவே இத்திட்டம் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். மழை நீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட 7  சிறப்பு அதிகாரிகள்:-

* தஞ்சை மாவட்டத்திற்கு ககன்தீப் சிங் பேடி

* திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி

* நாகை மாவட்டத்திற்கு சந்திரமோகன்
 
* கரூர் மாவட்டத்திற்கு கோபால்

* திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக்

 *அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ்குமார்

* புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா ஆகியோர் ஆவர்.

Next Story