37 நாட்களுக்குப் பிறகு ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனாவில் இருந்து விடுபட்ட ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில்தான் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் அடந்த 37 நாட்களாகவே கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலத்தை நோக்கியே ஈரோடு மாவட்டம் இருந்து வந்தது.
இந்த நிலையில் 37 நாட்களுக்குப் பிறகு இன்று ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story