சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு


சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 May 2020 7:02 PM IST (Updated: 23 May 2020 7:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை சார்பில் இன்று வெளியான செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில், சென்னையில், 624 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 733 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story