பொதுத்தேர்வு குறித்து பயமா? ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் கல்வித்துறை ஆலோசனை
பொதுத்தேர்வு குறித்து பயமா? மிஸ்டு கால் கொடுத்தால் தேர்வு குறித்த கவலைகளை போக்குவது எப்படி என்று கல்வித்துறை ஆலோசனைகளை வழங்க இருக்கின்றனர்.
சென்னை,
கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வுக்கான அனைத்து பணிகளிலும் பள்ளிக்கல்வி துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் சந்தித்து இருக்கும் பிரச்சினைகள் மற்றும் பொதுத்தேர்வு பயங்களை போக்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வி துறை, யுனிசெப் மற்றும் நாளந்தாவே அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ‘டேக் இட் ஈசி’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 9266617888 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் போதும், அவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பல்வேறு விஷயங்களை எடுத்து கூறவும், தேர்வை எதிர்கொள்வது எப்படி?, தேர்வு குறித்த கவலைகளை போக்குவது எப்படி? என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதனை பயன்படுத்த பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story