தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு
x
தினத்தந்தி 1 Jun 2020 8:10 PM IST (Updated: 1 Jun 2020 8:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிகல்வி​த்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது  வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலை நீடித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும், ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள் பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.

இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித பயப்படுவதாக இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக  வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும், மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் பள்ளிகல்வி​த்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வி​த்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story