சிறுமி நரபலி: பெண் மந்திரவாதி உட்பட 5 பேர் கைது


சிறுமி நரபலி: பெண் மந்திரவாதி உட்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2020 2:32 PM IST (Updated: 2 Jun 2020 4:23 PM IST)
t-max-icont-min-icon

சிறுமி நரபலி விவகாரத்தில் பெண் மந்திரவாதி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் கடந்த 18 ஆம் தேதி தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி குளக்கரை ஓரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தந்தையே 13வயது மகளை கழுத்து நெரித்து கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த பெண் மந்திரவாதி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூன்றாவது மகளை கொலை செய்துவிட்டால் அதிக செல்வம் சேரும் என பெண் மந்திரவாதி கூறியதாகவும், அதனால் தான் பன்னீர் மகள் என்று பாராமல் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெண் மந்திரவாதியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்த தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story