மாநில செய்திகள்

அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாக பெற்றது பெரும் பேறு - கனிமொழி எம்.பி., டுவீட் + "||" + It was a great blessing to have a father as leader MP Kanimozhi

அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாக பெற்றது பெரும் பேறு - கனிமொழி எம்.பி., டுவீட்

அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாக பெற்றது பெரும் பேறு - கனிமொழி எம்.பி., டுவீட்
அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாக பெற்றது பெரும் பேறு என்று கனிமொழி எம்.பி. கூறி உள்ளார்.
சென்னை,

முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கை பின்பற்றி கருணாநிதியின் பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி. டி.ஆர்.பாலு, உதயநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.


இந்தநிலையில்,  தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி அவர்குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் கலைஞரை பார்க்க வந்த வயதான தொண்டர் ஒருவர் கலைஞரை 'எப்படி இருக்க? என்னைய நியாபகம் இருக்கா? முதலமைச்சர் ஆயிட்ட! உனக்கெல்லாம் என் நினைவு இருக்குமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அவர் கலைஞரை ஒருமையில் பேசியதை கண்டு சுற்றியிருந்த அனைவரும் திகைத்து போயுள்ளனர். ஆனால் கலைஞர் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் சாவகாசமாக அந்த முதியவரது பெயரை சரியாக சொல்லி அழைத்துள்ளார். மேலும் பொதுக்கூட்டத்திற்கு பேச வந்தபோது அவரை தேடியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கூறியுள்ள எம்.பி கனிமொழி 'அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு.' என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையங்கள் அருகில் கொரோனா சிகிச்சை மையம்; நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்தும், அதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசினார்.
2. மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும்: “5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது” - கனிமொழி எம்.பி. பேட்டி
“5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் உடன்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
3. இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது - கனிமொழி எம்.பி.
இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
4. தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு; கனிமொழி எம்.பி. கிண்டல்
தமிழகம் முழுவதும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார்.