10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 3 Jun 2020 10:56 AM GMT (Updated: 3 Jun 2020 10:56 AM GMT)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்பு காரணமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  கொரோனா கட்டுக்குள் வராததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவியது.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்தநிலையில்  பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்  என்றும்,  http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story