தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு


தமிழக தலைமைச் செயலாளர்  கே.சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2020 6:05 PM IST (Updated: 3 Jun 2020 6:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கேசண்முகத்தின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாகச் கே.சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என அரசு வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில், இந்தப் பதவி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story