இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்


இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில்  ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்
x
தினத்தந்தி 4 Jun 2020 4:15 AM IST (Updated: 4 Jun 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் தனியார் பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தேசிய அளவில் முதலிடத்தை பெற்று இருக்கிறது.

சென்னை,

உலகளவில் புகழ்பெற்ற புள்ளியியல் கணக்கீட்டு அமைப்பு நிறுவனம் ‘நேச்சர் இன்டெக்ஸ்’ ஆகும். இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிஞர்களை கொண்டு தேசிய அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, சில கணக்கீடுகளின் அடிப்படையில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர நிர்ணய பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான காலகட்டங்களில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து அதற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், அவை சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதன் தரத்தை நிர்ணயித்து, பட்டியலிடுகிறது.

அதன்படி எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேசிய அளவில் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் தேசிய அளவில் வேதியியல் பிரிவில் 19-வது இடத்திலும், இயற்பியல் பிரிவில் 28-வது இடத்திலும், இயற்கை மற்றும் அறிவியல் படிப்புகளில் 5-வது இடத்திலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இருக்கிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story