செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு


செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
x
தினத்தந்தி 4 Jun 2020 2:30 PM IST (Updated: 4 Jun 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

செம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனத்திற்கு மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சர்தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் ஆவார். இது கவுரவப் பதவியாகும்.

இந்தநிலையில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார்.

பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததை பாராட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Next Story