தமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
தமிழகத்தில் முதலீடு செய்ய மோட்டார் வாகன துறையில் தலைசிறந்த 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும்
என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா, ஜாகுவார், டொயோட்டோ, ஆடி, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Tags :
Next Story