யானைக்கு வெடிமருந்து வைத்தவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
கேரள மாநிலம், யானைக்கு வெடிமருந்து வைத்தவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதனை அந்த யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.
இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கொரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இது போன்ற சம்பவங்களின் பிரதிப்பலிப்பாகதான் பார்க்கிறேன். யானையை வெடி வைத்து கொன்ற அந்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். காட்டு யானையை கொன்றது ஓட்டு மொத்த மக்களுக்கும் மன வேதனையை உண்டாக்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story